உலகளாவிய சந்தையில் நேர்மறையான வேகத்தின் காரணமாக அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு வர்த்தக விற்பனை மற்றும் குறைந்த முதலீடு காரணமாக தூண்டப்பட்டுள்ள பங்குச்சந்தை கரடியின் ஆதிக்கத்தில் உள்ளது. இந்த மூலோபாய மாற்றம் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக விற்பனையை பதிவு செய்திருப்பதுடன், சந்தையை அதீத விற்பனை தளத்திற்க்கு கொண்டு சென்றுள்ளது. அதே வேளையில், வளர்ந்த நாடுகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக புதிய வைரஸ்களில் குறைவான விகிதம் காணப்பட்டது, மேலும் பொருளாதாரத்தை உயர்த்த பெடரல் ரிசர்வ் வாரியம் முயற்சிகள் எடுக்கும் என்கிற எதிர்பார்ப்புகளும் இருந்தது.

Share Markets are on bearish trend predicted by Geogit Financial

தற்போது இந்தியாவில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலம் பெரும்பாலும் எதிர்பார்ப்புடன் ஒத்துப்போவதுடன் சந்தையை பாதிக்க வாய்ப்பில்லைஅதேசமயம்ஊரடங்கின் வெற்றி (Lockdown Success) விகிதம் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள கடுமையான நடவடிக்கைகளை தளர்த்துவது குறித்து எதிர்காலத்தில் சந்தை கவனம் செலுத்தும்உள்ளூர் அல்லது மாவட்டப் பகுதியின் நிலைமையின் அடிப்படையில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு சில தளர்வுகளை நாம் எதிர்பார்க்கலாம்மே 3 ஆம் தேதி காலக்கெடுவுக்கு பிறகு ஆரோக்கியமான அளவிலான முன்னேற்றத்தை வழங்கிய பின்னர் மேலும் சில தளர்வுகளை நாம் எளிதில் எதிர்பார்க்கலாம்.

2020ம் ஆண்டிற்க்கான நான்காவது காலாண்டு காலம் துவங்கியுள்ளதுடன்அதன் எதிர்பார்ப்பும் கலந்துள்ளதுசில துறைகள் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் சீனா மற்றும் பிற நாடுகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வெளிப்புற காரணிகளாலும்சில துறைகள் ஊரடங்கு மற்றும் தேவை மற்றும் வழங்கல் துறையின் வீழ்ச்சி போன்ற உள்நாட்டு காரணிகளிலாலும் பாதிக்கப்பட்டுள்ளதுஉலகில் முழுமையான ஊரடங்கு காரணமாக பெரிய தாக்கம் 2021ம் ஆண்டின் முதல் காலாண்டில் இருக்கும், 2020ம் ஆண்டின் 4ம் காலாண்டு முடிவுகள் சந்தைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்காது.

இன்று சந்தை வேகம் தொழில்நுட்ப காரணிகளை பெரிதும் சார்ந்துள்ளதுதேசிய பங்குச்சந்தை நிஃப்டியின் வரம்பு கடந்த வாரத்தில் 8,000 முதல் 8,500 ஆக உயர்ந்து 8,500 முதல் 9,600 ஆக உயர்ந்துள்ளதுஇன்று சாதகமாக உள்ள உலகளாவிய சந்தையின் அடிப்படையில் அந்நிய முதலீட்டாளர்களின் மூலோபாயம் பராமரிக்கப்படும் வரையிலும்மேலும் உலகளாவிய மற்றும் உள்நாட்டு ஊரடங்கு காரணமாக குறைகிற நோய்த்தொற்று விகிதத்தின் காரணமாகவும் இந்த வரம்பு தொடரும்பொருளாதார நடவடிக்கைகளில் சரிவு காரணமாக ஒட்டுமொத்த நிலைப்பாடு எச்சரிக்கையாக இருந்தாலும்நிதிச் சந்தை மற்றும் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தைச் அதிகரிக்க பெடரல் ரிஸர்வ் வாரியத்திலிருந்து அதிக சலுகைகள் கிடைக்கும் என்று உலக சந்தை நம்புகிறதுஇந்தியாவில் அடுத்த மாதம் பொருளாதார தளர்வு மற்றும் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட ரூ .1.7 லட்சம் கோடிக்கு மேலான இரண்டாவது பொருளாதார தொகுப்பு எதிர்பார்க்கப்படுகிறது.