கொரோனா வைரஸின் பரவலின் வேகமும் அதன் கட்டுப்பாடும் சந்தைகளின் குறுகிய மற்றும் நடுத்தர முதலீடுகளின் எதிர்காலத்தையும், எந்தவொரு சொத்து மதிப்பீடுகளையும் தீர்மானிக்கும் காரணியாக இருக்கக்கூடும் என்பதால் எந்தவொரு குறிப்பிட்ட முதலீட்டு ஆலோசனையையும் பகிர்ந்து கொள்ள நான் உண்மையில் தயங்குகிறேன்.

Geogit MD C J George advise to share market investors

இந்த வைரஸை எவ்வாறு கொல்வது அல்லது அதை தடுத்து நிறுத்துவது என்பது குறித்த நம்பகமான அறிவியல் தெளிவு இல்லாததால், இந்த வைரஸ் பரவல் காலத்தில் அனைத்து வம்சாவளிகளை சேர்ந்த நிபுணர்களும் பொறுமையுடன் இருக்குமாறு  தொற்று நோய்களுக்கான அதிபர் டிரம்பின் சிறப்பு ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபாசி விடுத்துள்ள வேண்டுகோளை நான் மீண்டும் மீண்டும் நினைவு கூறுகிறேன். அறியப்படாத இந்த அச்சத்திற்கு எதிராக எந்த நிதி சொத்து இலாகாவும் விலக்காக இருக்கமுடியாது என்று முதலீட்டாளர்களுக்கு நான் கூற விரும்புகிறேன், ஆகவே தற்போது நமக்கு எஞ்சியிருப்பது வரலாற்றிலிருந்து கற்பதே ஆகும், இதுபோன்ற ஒவ்வொரு உலகளாவிய பேரழிவிற்கும் பின்னர், சந்தை மீட்பு வீழ்ச்சியைப் போலவே வேகமாக இருக்கும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறது, ஆதலால் தற்போது நம் உயிரையும் நம் அண்டை வீட்டாரையும் காப்பாற்றுவதை நோக்கி மட்டுமே நமது முழு கவனமும் செலுத்தப்பட வேண்டும்.

இக்கால கட்டத்தில் பொறுமையாக இருங்கள் என்று மட்டுமே என்னால் கூற இயலும், ‘எவ்வளவு காலம்’ என்று யாராவது என்னிடம் கேட்டால் இந்த நேரத்தில் என்னிடம் பதில் இல்லை என்று நான் ஒப்புக் கொள்கிறேன். எப்போதும் ஒரு விதியை நினைவில் கொள்ளுங்கள்: வெற்றிகரமான முதலீட்டிற்கு ஒன்பது ஆண்களின் பொறுமை மற்றும் ஒரு மனிதனின் புத்திசாலித்தனம் தேவை. தற்போதைய மதிப்பிழப்பு உங்களைப் பற்றியது அல்ல; இது முழு உலகத்தையும் பற்றியது மற்றும் வைரஸின் பரவல் அடங்கியவுடன், ஈக்விட்டி சந்தைகளில் பணப்புழக்கம் மிக அதிகமாகவும் விரைவாகவும் இருக்கும், அந்நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு கீழ்நிலையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. ஒருவருக்கு முதலீடு செய்ய சேமிப்பு இருந்தால், தைரியமாக முதலீட்டைத் தொடங்க அல்லது உங்கள்  ஒழுங்குப்படுத்தப்பட்ட முதலீட்டு திட்டங்களை (எஸ்.ஐ.பி.) உயர்த்துவதற்கான நேரம் இது. நெருக்கடியான இந்த தருணத்தில் சந்தையிலிருந்து நான் பெற்ற விவேகமான கற்றலை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

முதலீட்டாளர்களுக்கு என்னிடம் மேலும் ஒரு முக்கியமான ஆலோசனை இருக்கிறது! நீங்கள் வீட்டில் தனித்திருக்கும் இந்த நேரத்தில், தரகுத்தொகை குறைவாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருப்பதால், பங்குச்சந்தை வர்த்தகத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள், இது உங்கள் செல்வத்தை மட்டுமே அழிக்கும். நீங்கள் கற்க உங்களுக்கு நிறைய நேரமிருப்பதுடன் மேலும் உங்களுக்கு இரண்டாவது கருத்து தேவைப்பட்டால்  நிபுணர்களின் உதவியை பெற்று புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். முதலீட்டு யோசனைகளுக்காக எங்கள் ஆராய்ச்சி துறையின் அறிக்கைகளையும் நீங்கள் படிக்கலாம்.

நம் சமூகத்தை காப்பாற்ற அரசின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப பாதுகாப்பாக இருங்கள்.

அன்புடன்

சி.ஜே.ஜார்ஜ்